கிரிக்கெட் (Cricket)

பும்ரா செய்த செயல்.. 2-வது டெஸ்ட்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்

Published On 2024-09-24 02:24 GMT   |   Update On 2024-09-24 02:24 GMT
  • இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது.
  • இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 27-ந் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் வரும் 27-ம் தேதி முதல் நடைபெறவுளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் முதல் டெஸ்ட்டில் விளையாடிய அனைத்து வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர விரர் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி சென்னையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் காயமடைந்தார். இதனால் அவர் இப்போட்டியில் அதிகம் பந்துவீசவும் வரவில்லை.

இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன தனது காயத்திற்காக சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது காயத்தை மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், அவர் முழுமையான உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே கான்பூர் டெஸ்டில் விளையாட முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News