கிரிக்கெட் (Cricket)

முதல் பந்திலே போல்ட்.. கீழே விழுந்த டவல் - அப்புறம் நடந்த ட்விஸ்ட்

Published On 2024-09-29 04:52 GMT   |   Update On 2024-09-29 04:52 GMT
  • ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார்.
  • பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது.

இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சோமர்செட் மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சோமர்செட் அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷோயப் பஷீர் தனது முதல் பந்திலேயே அபோட் பந்துவீச்சில் போல்டானார்.

ஆனால் அந்த பந்தை வீசும்போது அபோட் இடுப்பில் இருந்த துண்டு கீழே விழுந்தது. இதை கவனித்த பஷீர் நடுவரிடம் தெரிவிக்க, அந்த பந்தை டெட் பாலாக நடுவர் அறிவித்தார்.

பேட்ஸ்மேன் பந்தை சந்திக்கும் போது கவன சிதறல் ஏற்படும் வகையில் ஏதேனும் அசைவுகள், சத்தம் கேட்டால் அந்த பந்து டெட் பாடலாக அறிவிக்கப்படும்.

அதனால் பஷீர் தனது விக்கெட்டை காப்பாற்றினார். ஆனால் பஷீர்க்கு நீண்ட நேரம் இந்த அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை. அபோட் பந்துவீச்சில் அடுத்த 2 பந்துகளிலேயே பஷீர் டக் அவுட் ஆனார்.

இதன் விளைவாக, சோமர்செட் முதல் இன்னிங்ஸில் 136 ரன்களுக்குச் சுருண்டது.

Tags:    

Similar News