கிரிக்கெட் (Cricket)
null

சிறப்பான தேர்வு...! வாஷிங்டன் சுந்தர் விவகாரத்தில் பல்டி அடித்த சுனில் கவாஸ்கர்

Published On 2024-10-25 04:48 GMT   |   Update On 2024-10-26 06:53 GMT
  • குல்தீப் யாதவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.
  • முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று புனேயில் தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கே.எல். ராகுல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு சுப்மன் கில், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

மூன்று மாற்றங்கள், குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டதை சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருந்தார்.

வாஷிங்டன் சுந்தர் தேர்வு இந்திய அணியின் கடைநிலை பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை காட்டுகிறது. குல்தீப் யாதவை நீக்கியிருக்கக் கூடாது. நான் அவரை அணியில் வைத்திருப்பேன் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

ஆனால் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி ஏழு விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் "என்ன ஒரு ஈர்க்கக்கூடிய வகையிலான ஆடும் லெவன் தேர்வு. வாஷிங்டன் சுந்தரால் கொஞ்சம் கூடுதலாக பேட்டிங் செய்யவும் முடியும். பந்து வீசவும் முடியும்" என்றார்.

ரஞ்சி டிராபி போட்டியில் டெல்லி அணிக்கெதிராக வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாடு அணிக்காக சதம் விளாசியிருந்தார். இதனால் உடனடியாக 2-வது போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

Tags:    

Similar News