கிரிக்கெட் (Cricket)

டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் ஜெர்சி: ரெஸ்டாரண்டில் பிரேம் செய்து அழகு பார்த்த ரெய்னா

Published On 2024-08-02 09:26 GMT   |   Update On 2024-08-02 09:26 GMT
  • ரெய்னா, டோனி ஆகியோரை ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
  • இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்துள்ளார்.

ஆம்ஸ்டர்டாம்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் 'தல' என்றும், 'சின்ன தல' என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.

இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வை அறிவித்ததும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

சி.எஸ்.கே .அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் எம்.எஸ்.டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News