கொல்கத்தா அணியின் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்? - வெளியான புதிய தகவல்
- 2025 ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
- ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகி வேறு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட இந்திய டி20 அணியின் கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவ்க்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
கடந்த ஐபிஎல் சீசனின்போது மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி சோபிக்கவில்லை. இதற்கிடையே அணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அந்த அணியில் இருந்து விலகி வேறு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ்க்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படாததால் அவரும் மும்பை அணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் 2014 முதல் 2017 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார். அதன் பிறகு தான் மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.