கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்திய திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On 2024-08-05 01:23 GMT   |   Update On 2024-08-05 01:23 GMT
  • திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
  • அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதிலில் களமிறங்கிய கோவை அணி பேட்டர்கள் துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது.

கோவை அணி சார்பில் ராம் அரவிந்த் 27, அத்தீக் உர் ரஹ்மான் 25 மற்றும் சுஜய் 22 ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் புத்துர், சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு வழக்கம்போல ரவிசந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மற்ற வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திண்டுக்கல் அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 52, பாபா இந்திரஜித் 32 மற்றும் சரத் குமார் 27 ரன்களை எடுத்தனர். கோவை அணி சார்பில் சித்தார்த், வல்லியப்பன் யுதீஸ்வரன் மற்றும் கௌதம் தாமரை கண்ணன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

Tags:    

Similar News