கொல்கத்தா அணியில் கம்பீருக்கு பதில் ஜாக் காலிஸ்...!
- ஜாக் காலிஸ் கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார்.
- 2015-ல் பொறுப்பு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு அடித்தப்படியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகமுறை (3) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சுமார் 10 வருடத்திற்குப் பிறகு 2024 சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த இரண்டு முறை வென்ற நிலையில், அவர் ஆலோசகராக இருக்கும்போது 3-வது முறையாக வென்றுள்ளது.
தற்போது கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக சென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சப்போர்ட் ஸ்டாஃப் ஆக பணிபுரிந்து வந்த அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டஸ்கொதே ஆகியோரும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொல்கத்தா அணி ஆலோசகர் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோரை நியமிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட்டி தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸை தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக் காலிஸ் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோச்சிங் ஸ்டாஃப் ஆக இருந்துள்ளார். 2015-ல் பொறுப்பு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேவருடத்தில் பேட்டிங் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் ஜாக் காலிஸ் 2012 மற்றும் 2014 சீசன்களில் விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா ஆகியோரை நியமிக்க அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்கி பாண்டிங் டெல்லி அணியில் இருந்து வெளியேறியுள்ளார். சங்கக்காரா இன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்தான் நீடிக்கிறார்.