இது சாதாரண விஷயமல்ல: வருண் சக்கரவர்த்தியை பாராட்டிய சூர்யகுமார் யாதவ்
- இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:
முதல் பேட்டிங் ஆடும்போது பேட்ஸ்மேன்களால் எந்த ரன்கள் சேர்க்க முடிகிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் 125 ரன்களோ அல்லது 140 ரன்கள் எடுப்பதையோ விரும்பமாட்டோம்.
இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம்.
டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்ல வேண்டும்.
மிகச்சிறந்த பவுலிங்கை வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளது என தெரிவித்தார்.