கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி: பாகிஸ்தான் கேப்டன் சொன்னது என்ன?

Published On 2024-09-03 13:21 GMT   |   Update On 2024-09-03 13:21 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசம் கைப்பற்றியது.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்துக்கு முன்னேறியது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்துக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8வது இடத்துக்கு சரிந்தது.

இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நம்மை எப்படி மேம்படுத்தலாம் என்றும், நமது டெஸ்ட் பக்கத்தை முன்னோக்கி கொண்டுசெல்வது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன்.

சுமார் 10 மாத இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எளிதான காரியம் அல்ல.

இந்தத் தொடரை இழப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வீரர்கள் சிறப்பாகச் செயல்பட விரும்பினர் என்பதும் உண்மை.

ஆனால் நாங்கள் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தயாராக இல்லை. நாம் முன்னேற வேண்டுமானால் சில தோல்விகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அதில், முதல் படியாக நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க அணி முயற்சிக்க வேண்டும்.

முக்கிய விஷயம் என்னவென்றால், வேகப்பந்துவீச்சில் நமது பங்குகளை உருவாக்க வேண்டும். தொடர்ந்து சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடும் பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமளித்து நிலையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News