கிரிக்கெட் (Cricket)
null

ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள்.. உலக சாதனை படைத்த வீரர்- வீடியோ

Published On 2024-08-20 07:22 GMT   |   Update On 2024-08-20 11:32 GMT
  • டேரியஸ் விசர் 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார்.
  • அதில் 5 பவுண்டரி மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும்.

சமோவா:

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். அதே சாதனையை தற்போது சமோவா நாட்டின் வீரர் டேரியஸ் விசர் படைத்துள்ளார். மேலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

முதன் முதலாக 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். அதன் பின்பு, கீரான் பொல்லார்டு (2021), நிக்கோலஸ் பூரன் (2024), திபேந்திரா சிங் ஏரி (2024) ரோகித் சர்மா / ரிங்கு சிங் இணைந்து (2024) என ஐந்து முறை இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. 

அந்த வரிசையில், 2026 டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் வனுவாட்டு- சமோவா தீவுகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வனுவாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15-வது ஓவரில் டேரியஸ் விசர் ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது.

உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. இதில் டேரியஸ் விசர் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார். அதில் 5 பவுண்டரி மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும்.

இதனையடுத்து ஆடிய வனுவாட்டு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சமோவா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Tags:    

Similar News