கிரிக்கெட் (Cricket)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்தார் ஜாகீர் கான்

Published On 2024-08-28 11:16 GMT   |   Update On 2024-08-28 11:16 GMT
  • கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது.
  • 2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் களத்திற்கு ஜாகீர் கான் நுழைந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளார்.

கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் களத்திற்கு ஜாகீர் கான் நுழைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் பொறுப்பு வகித்து வந்தார்.

Tags:    

Similar News