விளையாட்டு (Sports)
null

என்னை கொலை செய்ய விரும்பினாலும் கவலையில்லை: ஒலிம்பிக் குறித்து சுனில் சேத்ரி வெளிப்படை பேச்சு

Published On 2024-08-01 13:04 GMT   |   Update On 2024-08-01 13:25 GMT
  • 150 கோடி மக்கள் தொகை கொண்ட நம்மால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது உண்மையல்ல.
  • 150 கோடி மக்களின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்க முடியவில்லை.

ஒலிம்பிக் என்று வந்தாலே இந்தியா பதக்கம் வெல்லுமா?... என்ற கேள்வி இந்திய மக்களிடம் ஓடுவதில் சந்தேகம் ஏதும் இல்லை. கடந்த முறை ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்கள் வென்றது. இதுதான் ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை ஆகும்.

தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

150 கேடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒலிம்பிக்கில் மட்டும் பதக்கம் வெல்ல சிரமப்படுகிறது என பெரும்பாலானோர் கேட்பது உண்டு. அதற்கு காரணம் அடிமட்ட அளவில் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதில் தோல்வியடைந்துள்ளோம். இதுதான் முக்கிய காரணம் இந்தியாவின் முன்னணி கால்பந்து வீரராக திகழ்ந்த சுனில் சேத்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுனில் சேத்ரி கூறியதாவது:-

150 கோடி மக்கள் தொகை கொண்ட நம்மால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது உண்மையல்ல. 150 கோடி மக்களின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்க முடியவில்லை. சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுகின்றன. அவர்கள் நம்மை விட வெகு தூரத்தில் உள்ளனர்.

நம்முடைய நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை என மக்கள் சொல்கிறார்கள. இது 100 சதவீதம் உண்மை. உதாரணத்திற்கு அந்தமானை சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கு கால்பந்து அல்லது ஈட்டி எறிதல் அல்லது கிரிக்கெட்டில் திறமை இருக்கும். அது அவனுக்குக் கூட தெரியாது. ஓரிருமுறை முயற்சி செய்தபின், சரியான வழிக்காடுதல் இன்றி அதை விட்டுவிட்டு. கால் சென்டரில் வேலை பார்க்க சென்றுவிடுவான்.

அடிமட்ட அளவில் திறமையை அடையாளம் கண்டு, திறமையை சரியான நேரத்தில் மற்றும் சரியான நடைமுறையுடன் வளர்ப்பதில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதை சொல்வதற்காக மக்கள் என்னை கொலை செய்ய விரும்பினாலும் நான் கவலைப்பட போவதில்லை. இதான் யதார்த்தம்.

இவ்வாறு சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News