விளையாட்டு

முத்தம் கொடுத்த விவகாரம் - ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவருக்கு தடை!

Published On 2023-08-26 14:52 GMT   |   Update On 2023-08-26 14:52 GMT
  • கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
  • லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்தது.

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

 

இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து அவர் பதவி விலகியதாக செய்திகள் வந்தன. இதையடுத்து அந்த செய்தி பொய் எனவும் ராஜினாமா செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

Similar News