ஒடிசாவில் கோலாகலமாக தொடங்கியது உலக கோப்பை ஹாக்கி தொடர்
- ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி தொடர் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.
- நாளை முதல் 29-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
புவனேஸ்வர்:
ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது.
நாளை முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மட்டுமின்றி உலகின் மிக பெரிய ஸ்டேடியம் ஆக இருக்கும்.
இந்நிலையில், ஒடிசாவின் கட்டாக் நகரில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதல் மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான நடனங்கள் மற்றும் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரபல பாலிவுட் பிரபலங்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சியும் நடந்தது. இந்தத் தொடக்க விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.