விளையாட்டு

என்னை எருமை என்று கிண்டலடித்தார்கள்.. பதக்கம் வென்று பதிலடி கொடுத்தேன் - தீபா கர்மாகர்

Published On 2024-10-13 14:05 GMT   |   Update On 2024-10-13 14:05 GMT
  • ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் தங்கப்பதக்கம் வென்றார்.
  • தீபா கர்மாகர் அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட, தீபா கர்மாகர் அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தாண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது கடந்த கால விளையாட்டு அனுபவங்கள் குறித்து தீபா கர்மாகர் பகிர்ந்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தீபா கர்மாகர், "தனது ஆரம்பகால பயிற்சியாளர் ஒருவர் தன்னை எருமை என்று சொல்லி கேலி தொடர்ச்சியாக கேலி செய்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம் வென்று என்னை கேலி செய்தவர்களுக்கு நான் பதிலடி கொடுத்தேன். என்னை எருமை என்று கிண்டலடித்து பயிற்சியாளர் நான் பதக்கம் வென்ற பிறகு பூங்கொத்துகளுடன் என்னை வரவேற்க்க விமான நிலையம் வந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News