நாளை முதல் நொய்டாவில் புரோ கபடி 'லீக்' போட்டிகள்
- புரோ கபடி ‘லீக்’போட்டியில் நேற்றுடன் 43 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
- புனே அணி 5 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 29 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
ஐதராபாத்தில் இன்றுடன் போட்டிகள் முடிகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் நடப்பு சாம்பியன் புனேரி பல்தான் அணிகளும், 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்ளூரு புல்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
நாளை முதல் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் போட்டி நடக்கிறது. நாளைய ஆட்டத்தில் உ.பி.- மும்பை, குஜராத்- அரியானா அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி 'லீக்' போட்டியில் நேற்றுடன் 43 ஆட்டங்கள் முடிந்துள்ளன. புனே அணி 5 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 29 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
மும்பை, டெல்லி தலா 24 புள்ளிகளுடனும், பாட்னா 22 புள்ளிகளுடனும் அரியானா, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் தலா 21 புள்ளியுடனும் உள்ளன. ஜெய்ப்பூர் (20), உ.பி. (19), பெங்கால் (18), பெங்களூரு (12), குஜராத் (7) அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.