கிரிக்கெட் (Cricket)

ஓராண்டு இடைவெளிக்கு பிறகு நாளை மீண்டும் களத்திற்கு திரும்புகிறார் முகமது சமி

Published On 2024-11-12 11:22 GMT   |   Update On 2024-11-12 11:22 GMT
  • முகமது சமி இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
  • பார்டர் கவாஸ்கர் தொடரில் முகமது சமி இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்திய சமி, கடந்த நவம்பருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் முகமது சமி இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது சமி, குணமடைந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நாளை நடைபெறும் ரஞ்சி போட்டியில் முகமது சமி விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்துக்கு எதிராக நாளை தொடங்கும் ரஞ்சி போட்டியில் ஷமி களமிறங்குவார் என பெங்கால் அணி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் முகமது சமி இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முழுமையாக உடல்தகுதி பெறாததால் அந்த தொடரில் இடம்பெறவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News