கிரிக்கெட் (Cricket)

பார்டர் கவாஸ்கர் கோப்பை - ரோகித், கோலிக்கு அட்வைஸ் கொடுத்த பிரட் லீ

Published On 2024-11-13 10:41 GMT   |   Update On 2024-11-13 10:41 GMT
  • ரோகித் மற்றும் விராட் கோலி கடைசியாக விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 100 ரன்களை கூட கடக்கவில்லை.
  • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் ரோகித் சர்மாவை அட்டாக் செய்வார்கள்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும்.

ரோகித் மற்றும் விராட் கோலி கடைசியாக விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 100 ரன்களை கூட கடக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருவரும் கம்பேக் கொடுப்பார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பாக ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ ஆலோசனை வழங்கியுள்ளார்.

யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரட் லீ, "தங்கள் பேட்டில் இருந்து தொடர்ந்து ரன்கள் வராவிட்டால் வீரர்கள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் கிரிக்கெட்டில் இருந்து விலகி புத்துணர்ச்சியோடு இந்த டெஸ்ட் தொடருக்கு திரும்ப வேண்டும்.

ஏனெனில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் ரோகித் சர்மாவை அட்டாக் செய்வார்கள். ரோகித் விளையாடுவதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். ஆகவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட இருவரும் தயாராக இருப்பார்கள என்று நினைக்கிறன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News