அந்த 4 பேரால் தான் என் மகனின் 10 ஆண்டுகால வாழ்க்கை சீரழிந்தது- சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு
- கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
- இவர்கள் மட்டும் இப்போது வரவில்லையென்றால், முன்பை போலவே சஞ்சுவை நீக்கியிருப்பார்கள்.
செஞ்சுரியன்:
இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறாது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயேன 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் புதிய தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் டோனி, ரோகித், விராட் கோலி ஆகியோர் என் மகனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக சஞ்சு சாம்சனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என் மகனின் 10 ஆண்டுகால வாழ்க்கையை 3 கேப்டன்களான டோனி, கோலி, ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் சீரழித்தனர். இந்த நெருக்கடியிலும் சஞ்சு வலுவாக வெளிவந்துள்ளது மகிழ்ச்சி. கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவர்கள் மட்டும் இப்போது வரவில்லையென்றால், முன்பை போலவே சஞ்சுவை நீக்கியிருப்பார்கள்.
இவ்வாறு சஞ்சு சாம்சனின் தந்தை கூறினார்.