விளையாட்டு
5-வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய ஹாக்கி அணி கைப்பற்றியது
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது
- முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5 ஆவது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
இதற்கு முன்பு இந்தியா 2011, 2016, 2018, 2023, ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.