விளையாட்டு
உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கங்கள் வென்ற இந்தியா
- சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
- 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 149-146 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சாரா லோபெஸ்சை (கொலம்பியா) வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.