விளையாட்டு
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 3 இந்தியர்கள் தங்கம் வென்று அசத்தல்
- பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கம் வென்றார்.
- ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்றார்.
பாங்காக்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார். அவர் 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 23 வயதான யர்ராஜி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்தார்.
ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ் தங்கம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கர், ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றார்.