விளையாட்டு (Sports)

பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா: இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் வீரர்கள் பட்டியல்

Published On 2024-07-09 10:32 GMT   |   Update On 2024-07-09 10:32 GMT
  • இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
  • ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். ஒலிம்பிக் அணித்தலைவராக மேரி கோம் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News