விளையாட்டு
காயத்தால் தங்கத்தை தவறவிட்ட நம்பர் 1 வீராங்கனை
- கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார்.
- 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றபோது மூட்டுவலியால் அவதிப்பட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் மோதினார்.
இதில் கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார். 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றிருந்தபோது மூட்டு வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதையடுத்து, கரோலினா மரின் போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம் ஹி பிங்ஜியாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.