விளையாட்டு

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் ஸ்வப்னில் குசேலே இறுதிப்போட்டிக்கு தகுதி

Published On 2024-07-31 10:07 GMT   |   Update On 2024-07-31 10:07 GMT
  • குசலே மொத்தம் 590-38x என்ற புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
  • மற்றொரு இந்திய வீரரான தோமர் மொத்தமாக 589-33x உடன் 11-வது இடத்தைப் பிடித்தார்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ 3பி தகுதிச் சுற்றில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ஸ்வப்னில் குசேலே ஆகியோர் கலந்து கொண்டனர். தகுதிச் சுற்றில் முதல் எட்டு துப்பாக்கி சுடும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர்.

அந்த வகையில் குசலே மொத்தம் 590-38x என்ற புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான தோமர் மொத்தமாக 589-33x உடன் 11-வது இடத்தைப் பிடித்தார். இதனால் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்.

சீனாவின் லியு யுகுன் மொத்தம் 594 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், நார்வேயின் ஜான்-ஹெர்மன் ஹெக் 593 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்,

3 முதல் 6 இடங்கள் முறையே செர்ஹி குலிஷ் 592 புள்ளி (உக்ரைன்), லுகாஸ் 592-35x புள்ளி (பிரான்சிஸ்), லாசர் கோவாசெவிக் 592-33x புள்ளி (செர்பியா), டோமாஸ் பார்ட்னிக் 590-40x புள்ளி (பொலந்து) ஜிரி பிரிவ்ராட்ஸ்கி 590-35x புள்ளி (செக் குடியரசு). 7-வது இடத்தில் தோமர் உள்ளார்.

Tags:    

Similar News