டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன்: நம்பர் 2 வீரருக்கு அதிர்ச்சி அளித்த பிரான்ஸ் வீரர்

Published On 2024-08-17 08:38 GMT   |   Update On 2024-08-17 08:39 GMT
  • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதினார்.

இதில் அல்காரஸ் 6-4, 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News