விளையாட்டு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து

Published On 2023-08-25 00:01 GMT   |   Update On 2023-08-25 00:01 GMT
  • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது.
  • தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

சுவிட்சர்லாந்து:

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்து காரணமாக மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த சங்கம் கடந்த மே மாதம் 30-ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதில், 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தாவிடில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் போராட்டம் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News