செய்திகள்
குமரி மாவட்டத்தில் புயல் பாதிப்பு: பேரிடர் நிதி வழங்க ஏற்பாடு - அமைச்சர் உதயகுமார்
குமரி மாவட்டத்தில் புயலினால் ஏற்பட்ட சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு தேவையான பேரிடர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை தாக்கிய புயலால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, பளுகல், ஈத்தாமொழி பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்ட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சாலைகள் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டு உள்ளன.
வெள்ள பாதிப்புகளை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சேத மதிப்பீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புயலினால் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சேத மதிப்பீடு குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்கு தேவையான பேரிடர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதற்காக 10 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு தேவையான உணவு வசதியும் செய்யப்பட்டு உள்ளது. வேலூரில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதலங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம். பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.