செய்திகள்

ராமநாதபுரத்தில் 2 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2018-01-06 06:59 GMT   |   Update On 2018-01-06 06:59 GMT
ராமநாதபுரத்தில் அரசு பஸ் மீதும் கல் வீசி தாக்கப்பட்டதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது. டிரைவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

ராமநாதபுரம்:

மாநிலம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் அவதி யடைந்துள்ளனர். அதிகாரிகளின் முயற்சியால் பஸ்கள் கணிசமாக இயக்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் இந்த பஸ்களில் கூட்டம் அலை மோதியது. நேற்று இரவு ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் புறப்பட்டது. அச்சுந்தன் வயல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசிவிட்டு தப்பினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது.

இதேபோல் கமுதிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீதும் அச்சுந்தன் வயல் அருகே கல் வீசி தாக்கப்பட்டது. இதில் அந்த பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து டிரைவர்கள் சக்திவேல், யுவராஜ் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Similar News