செய்திகள்

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை வழங்கிய மாணவன்

Published On 2018-08-27 14:08 GMT   |   Update On 2018-08-27 14:08 GMT
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் ரூ. 5,000 ரூபாயை மாணவன் வழங்கினான். இதை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். #keralaflood
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி., பெருமாள். இவரது மகன் கார்த்திகேயன், 10. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திகேயன் சென்ற ஆண்டு தனது பிறந்த நாளைக்கொண்டாடினார். 

அப்போது அவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பரிசாக பணத்தை கொடுத்துள்ளனர். இந்த பணத்தை கார்த்திகேயன் சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேரளாவில் பெய்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டு பலர் இறந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். 

இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து உதவிகள் செய்து வருகின்றனர். இவற்றை அறிந்த மாணவன் கார்த்திகேயன் தனது சேமிப்பு பணம் ஐந்தாயிரம் ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வங்கி வரைவோலையாக எடுத்து கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்தார். சிறுவனின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். #keralaflood
Tags:    

Similar News