செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் - உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு

Published On 2019-03-28 05:17 GMT   |   Update On 2019-03-28 05:17 GMT
கள்ளக்குறிச்சியில் உரிய அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்யததாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #DMK #UdhayanidhiStalin
கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.

கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் உரிய அனுமதியின்றி பிரசாரம் செய்யததாகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சங்கராபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #DMK #UdhayanidhiStalin
Tags:    

Similar News