செய்திகள் (Tamil News)

கமல்ஹாசனின் கட்சி 4 தொகுதிகளில் போட்டி இல்லை- தொண்டர்கள் ஏமாற்றம்

Published On 2019-03-29 07:49 GMT   |   Update On 2019-03-29 07:49 GMT
2 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #LokSabhaElections2019
சென்னை:

மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 39 பாராளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அவரது கட்சியின் பலத்தை தெரிந்துகொள்ள மற்ற அரசியல் கட்சிகளும் ஆர்வமாக இருந்தனர். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான கடந்த மார்ச் 26-ந்தேதி பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. திடீர் என்று வேட்பாளர் மாற்றப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் களம் காண முடியாமல் போனது.

வேட்பு மனு பரிசீலனையின்போது காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்புமனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் மனு முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமியின் மனு நிராகரிக்கப்பட்டது.

2 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தலுக்காக இதுவரை செய்த பணிகள் அத்தனையும் வீணாகியதால் அந்த பகுதிகளின் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்திலும் உள்ளனர். #MakkalNeedhiMaiam #LokSabhaElections2019
Tags:    

Similar News