செய்திகள் (Tamil News)
கோப்பு படம்

நோய் கட்டுப்பாட்டு பகுதி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் - தமிழக அரசு

Published On 2020-05-21 14:25 GMT   |   Update On 2020-05-21 15:01 GMT
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழத்தில் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் இடம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது.

குறிப்பாக கொரோனா அதிகம் பரவியுள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ஐகோர்ட்டில் தெரிவித்திருந்த தனது நிலைபாட்டில் இருந்து தமிழக அரசு தற்போது பின்வாங்கியுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு மையங்கள் வெறு இடத்திற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது:- 

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. 

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக மாற்று தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும்

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியே சென்று வர ஹால்டிக்கெட் அடிப்படையில் அனுமதி. 

பிறமாநிலம், பிற மாவட்டத்திலிருந்து பயணிக்கும் மாணவர் முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுதுவார்.

சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்று வர ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி.

ஆசிரியர்களுக்கும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் சுமார் 46 லட்சத்து 37 ஆயிரம் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும். 

9.7 லட்சம் மாணவர்களுக்கு 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

Similar News