தமிழ்நாடு (Tamil Nadu)
ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட மருத்துவக்குழு மாற்றியமைப்பு

Published On 2022-02-16 06:12 GMT   |   Update On 2022-02-16 07:41 GMT
ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய ஆலோசனையில் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என இதுவரை  154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வழக்கு தொடர்பாக ஏற்கனவே 90 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக யார் யாருக்கு சம்மன் அனுப்புவது என்பது குறித்தும், எவ்வாறு விசாரணை நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ 8 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 மருத்துவர்கள் அடங்கிய குழு  அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. சைபர் தாக்குதல்: உக்ரைன் அரசு இணையதளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்

Similar News