தமிழ்நாடு

வீட்டில் பதுக்கிய ரூ.50 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

Published On 2024-10-16 08:39 GMT   |   Update On 2024-10-16 09:47 GMT
  • இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
  • இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் பீடி இலைகள், விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

இதைத்தடுக்க மாவட்டம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி முறப்பநாடு பகுதியை சேர்ந்த துரை என்பவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 3 கிலோ கிரிஸ்டல் மெத்தமைட்டல் என்ற ஐஸ் போதைப்பொருளும், சாரஸ் என்ற போதைப்பொருள் 300 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News