தமிழ்நாடு (Tamil Nadu)

திருப்பூரில் சோகம்: லாரியும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் பலி

Published On 2023-11-16 12:53 GMT   |   Update On 2023-11-16 12:53 GMT
  • தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
  • இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.

விசாரணையில் கோவையில் இருந்து பழனி கோவில் சென்று திரும்பியதும், மனக்கடவு பகுதியில் விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.

காரும், லாரியும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News