தமிழ்நாடு

கோவை உக்கடத்தில் கேட்பாரற்று நின்ற 7 கார்கள் பறிமுதல்

Published On 2022-10-26 08:15 GMT   |   Update On 2022-10-26 08:15 GMT
  • கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலை கார் வெடித்தது.
  • போக்குவரத்து போலீசார் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் சாலையோரத்தில் கேட்பாரற்றும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களை பறிமுதல் செய்தனர்.

கோவை:

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலை கார் வெடித்தது. இந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து மாநகர போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் முக்கிய பகுதிகளில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சாலையோரங்களில் நிற்கும் கார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்று போக்குவரத்து போலீசார் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் சாலையோரத்தில் கேட்பாரற்றும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல மாநகர் முழுவதும் ரோட்டோரம் நீண்டகாலமாக நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News