தமிழ்நாடு

78-வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-15 03:41 GMT   |   Update On 2024-08-15 04:52 GMT
  • டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
  • கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

சென்னை:

இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகத்துக்கு எதிரே முக்கிய விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார்

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News