அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் பேசுகிறார்
- தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி கே.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.
- காஞ்சிபுரத்தில் துரைமுருகன், கோவையில் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் கனிமொழி, ஆவடியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்கள்.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் கே.அன்பழகன் நூற்றாண்டு நிறைவாக தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கே.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் உரையாற்றும் தி.மு.க. மூத்த தலைவர்களின் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி காஞ்சிபுரத்தில் துரைமுருகன், கோவையில் டி.ஆர்.பாலு, திண்டிவனத்தில் கனிமொழி, ஆவடியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.