தமிழ்நாடு

தட்டச்சு தேர்வில் ஆண்டிபட்டி மாணவி மாநில அளவில் முதலிடம்

Published On 2023-01-07 04:39 GMT   |   Update On 2023-01-07 04:39 GMT
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தட்டச்சு பள்ளியில் ஆங்கிலம் இளநிலை பாடம் பயின்ற மோனிஷா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
  • மோனிஷா தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆண்டிபட்டி:

தமிழகத்தில் மாநில அளவிலான தட்டச்சு தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இதற்கான முடிவுகள் இணையதளம் மூலம் வெளியானது. இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தட்டச்சு பள்ளியில் ஆங்கிலம் இளநிலை பாடம் பயின்ற மோனிஷா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து மாணவிக்கு பயிற்சி மைய நிர்வாகி மற்றும் சக மாணவிகள் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த பயிற்சி மையத்தின் மூலம் கலந்துகொண்டு தேர்வு எழுதியவர்களில் 131 பேர் சிறப்பு முதல் வகுப்பிலும், 62 பேர் முதல் வகுப்பிலும், 21 பேர் 2-வது வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News