வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்துக்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
- பெரம்பூர் கிழக்கு பகுதி செயலாளராக செந்தில் குமார், தெற்கு பகுதி செயலாளராக மணல் ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- குவைத் நாட்டுக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட மகளிர் அணி செயலாளராக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வடக்கு பகுதியை சேர்ந்த வக்கீல் நாகரத்தினம், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளராக பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த எஸ்.ஆர்.ஏ.பாபு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவராக பெரம்பூர் வெற்றி வேந்தன், செயலாளராக தண்டையார் பேட்டை ஜனார்த்தனன், புரட்சி தலைவி பேரவை மாவட்ட தலைவராக கொருக்கு பேட்டையை சேர்ந்த ரவி என்கிற சின்னா, செயலாளராக சரவணன் ஆகியோரும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளராக டேனியல் சச்சின் மணி, மகளிர் அணி மாவட்ட தலைவராக கொருக்குப்பேட்டை பிரேமா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட அணிகளுக்கு மாவட்ட துணைத்தலைவர்கள் இணை செயலாளர்கள், துணை செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மாணவர் அணி மாவட்ட தலைவராக புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரவணகுமார், செயலாளராக கொடுங்கையூரை சேர்ந்த கவுரி சங்கர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை தலைவராக வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவராக சரவணன், மருத்துவ அணி மாவட்ட செயலாளராக டாக்டர் ஜெய் விக்னேஷ் ராஜன், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளராக பவானி வெங்கடேசன், இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவராக டில்லி கணேஷ், வர்த்தக அணி மாவட்ட துணை தலைவராக சுரேஷ், அண்ணா தொழிற் சங்க மாவட்ட தலைவராக பாஸ்கரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவராக குப்புசாமி, செயலாளராக கவுனர்கான், பொதுக்குழு உறுப்பினராக ஐயப்பா வெங்கடேசனும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதிக்கான முக்கிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெரம்பூர் கிழக்கு பகுதி செயலாளராக செந்தில் குமார், தெற்கு பகுதி செயலாளராக மணல் ரவிச்சந்திரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
குவைத் நாட்டுக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவைத் தலைவராக ஷேக் அக்பர், செயலாளராக மோகன் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கும் பெரம்பூர் எம்.சேகர் இவர் ஏற்கனவே வகித்து வரும் பெரம்பூர் தெற்கு பகுதி, 44 மேற்கு வட்டக் கழகச் செயளலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.அன்பு ஏற்கனவே வகித்து வரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தெற்கு பகுதி, 42 வடக்கு வட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.
மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஒய்.கே.செந்தில் குமார், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும். எஸ்.முத்துச்செல்வம், மாவட்ட புரட்சி தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.ஏ.பாபு, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருக்கும் எம்.கவுனர்கான், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.பொன்னுசாமி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.