தமிழ்நாடு (Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோர உள்ளோம்- அண்ணாமலை

Published On 2024-07-08 13:49 GMT   |   Update On 2024-07-08 13:49 GMT
  • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்க உள்ளோம்.
  • வேங்கை வயல் உள்ளிட்ட 17 சம்பவங்கள் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுபோல் நடந்திருக்க கூடாது. சென்னையில் ஒரு அரசியல் தலைவர் அவரது சொந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த உள்ளோம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சிபிஐ விசாரணை கோர உள்ளோம்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்க உள்ளோம்.

சித்தாந்தத்தில் நேர் எதிராக இருந்தாலும் இந்த படுகொலையை பாஜக ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக மாறி உள்ளது.

வேங்கை வயல் உள்ளிட்ட 17 சம்பவங்கள் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

முதலமைச்சரின் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு கொலை நடந்த உடன் ஒரு பெரிய குற்றவியல் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை சமாதானம் செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன.

காவல் துறையின் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும். என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் சரி வராது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News