தமிழ்நாடு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.75 அடியாக உயர்வு

Published On 2022-12-17 04:27 GMT   |   Update On 2022-12-17 04:27 GMT
  • பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வந்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  • நீலகிரியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து படிபடியாக குறைந்து வருகிறது.

ஈரோடு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

மேலும் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வந்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறையினர், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நீலகிரியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3024 கனஅடி தண்ணீர்வந்துகொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்காலில் 300 கனஅடியும், பவானி ஆற்றில் 2700 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து இதே போல் இருந்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 105 அடியை எட்டும்.

Tags:    

Similar News