தமிழ்நாடு

ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-12-17 04:32 GMT   |   Update On 2023-12-17 06:56 GMT
  • 25 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படுகிறது.
  • வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.1455 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், முதற்கட்டமாக நிவாரண தொகை ரூ.6000 வழங்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளச்சேரியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். அவருடன் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

 25 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படுகிறது.

வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.1455 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மற்ற ரேஷன் கடைகளிலும் காலை 10.15 மணி முதல் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் விநியோகம் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயம் டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆகியோரும் வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Tags:    

Similar News