தமிழ்நாடு

முதல்வரின் தனி செயலாளர்கள் மாற்றம்- தமிழக அரசு

Published On 2024-08-20 07:31 GMT   |   Update On 2024-08-20 07:39 GMT
  • முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • 3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின் 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2-வது தனி செயலாளராக சண்முகம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் தனி செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமை செயலாளராக ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனி செயலாளர் உமாநாத்துக்கு வணிக வரி, பொதுத்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை, தொழில் துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, விழிப்புப்பணி, நீர்வளத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி, முதல்வரின் அலுவலக நிர்வாகம், சட்டத்துறை என 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்ட அனு ஜார்ஜிற்கு 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பயண ஏற்பாடுகள், கால்நடை, பள்ளிக்கல்வி, விளையாட்டு, ஆதிதிராவிடத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிபதிக்கு 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News