தமிழ்நாடு

பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Published On 2024-09-18 02:54 GMT   |   Update On 2024-09-18 07:19 GMT
  • வரும் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் பிரதமர் மோடி அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
  • பிரதமர் அமெரிக்கா செல்லும் முன்னர் சந்திப்பு நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பியபோது தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை கேட்டு பெற பிரதமர் மோடியை விரைவில் சந்திப்பேன் என்று கூறி இருந்தார்.

அதன்படி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டெல்லி செல்லும்போது சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பிரதமர் மோடியை சந்திக்கும்போது பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் மெட்ரோ ரெயில் திட்டம்-II செயல்படுத்துவதற்கான நிதியை கேட்டு பெறுவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தமிழக நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வலியுறுத்துவார் என தெரிகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லும் பயணத்திற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்காக 19 அல்லது 20-ந்தேதி டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News