தமிழ்நாடு

தொடர் கனமழை- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு

Published On 2023-12-18 14:48 GMT   |   Update On 2023-12-18 14:48 GMT
  • நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து இரு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News