தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளி பண்டிகை- சென்னையில் அகல்விளக்குகள் குவிந்தன

Published On 2022-10-09 08:15 GMT   |   Update On 2022-10-09 08:15 GMT
  • தீப ஒளி திருநாளில் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம்.
  • சென்னையில் அகல்விளக்கு விற்பனை களைகட்டி உள்ளது.

சென்னை:

சென்னையில் சாலையோரங்களில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரம் அடைந்து உள்ளது.

தீப ஒளி திருநாளில் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் அகல்விளக்கு விற்பனை களைகட்டி உள்ளது. ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் சாலையோரங்களில் கடை அமைத்து அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

பல்வேறு வண்ணங்களில், விதவிதமான வடிவங்களில் அகல்விளக்குகள் சென்னை புரசைவாக்கம், வடபழனி, பெரம்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு குவிந்துள்ளன.

ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அகல் விளக்குகளை பெண்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

இந்த ஆண்டு நல்ல விற்பனை இருக்கும் என மண்பாண்ட தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News