தமிழ்நாடு

2 கோடி உறுப்பினர்களுக்கு தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்குவது இன்று தொடக்கம்

Published On 2023-11-07 08:33 GMT   |   Update On 2023-11-07 08:33 GMT
  • கடந்த ஏப்ரல் 3-ந் தேதியன்று இது தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்து வந்தது.
  • அட்டை இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை:

தி.மு.க.வில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரான பிறகு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கு உடன் பிறப்புகளாய் இணைவோம் என்ற பெயரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

கடந்த ஏப்ரல் 3-ந் தேதியன்று இது தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்து வந்தது. இதில் வெற்றிகரமாக மேலும் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

இவ்வாறு சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை அண்ணா அறிவாலயத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஒப்படைத்திருந்தனர். அதன் மூலம் இப்போது புதிய உறுப்பினர் அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த அட்டை இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, தேனி, தென்காசி மாவட்டங்களுக்கான உறுப்பினர் அட்டை 10-ந் தேதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News