தமிழ்நாடு

மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலை கடத்திய டிரைவர் கைது

Published On 2023-09-28 06:54 GMT   |   Update On 2023-09-28 06:54 GMT
  • சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுராந்தகம்:

மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 1000 லிட்டர் கள்ளத்தனமாக விற்க செல்லும் பொழுது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையான போலீசார் விடியற்காலை மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த மினி லாரி சோதனை செய்த போது மிகப் பெரிய 11 பேரல்களில் 1000 லிட்டர் டீசல் இருப்பதை கண்டு அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் என்பவரிடம் விசாரிக்கும் பொழுது தனது வாகனங்களுக்கு டீசல் வாங்கி செல்வதாக கூறியுள்ளார்.இந்த டீசல் வாங்கியதற்கான ரசீது கேட்ட பொழுது அவர் இல்லை எனவும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளிக்கவே போலீசார் தீவிர விசாரணை செய்ததில் தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசரை கள்ளத்தனமாக குறைந்த விலைக்கு வாங்கி வந்தவாசி பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது பிடிபட்டார் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மினி லாரியையும் 11 பேரல் டீசலையும் கைப்பற்றி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் (வயது 44) பிடித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News